கனடாவின் பிராம்டன் நகரசபையின் முழுமையான அணுசரனையுடன் அதன் பிரதான பூங்காவில் அமையவுள்ள நினைவாலத்திற்கான கட்டிடப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக மண் ஆய்வு நடைபெற்றுள்ளது. அதற்கான இயந்திரங்கள் துணைகொண்டு அவ்வாய்வு துறைசார் வல்லுனர்களளால் செய்யப்பட்டது. தமிழர் தாயகங்களுக்கு வெளியே அமையவுள்ள முதல் தமிழின அழிப்பு நினைவாலயம் இதுவாகும். சிறீலங்கா தரப்பு வழமைபோல் தன் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினாலும் அதனையும் வெற்றிகரமாகக் கடந்து பணிகள் வேகம் பெற்று வருகின்றன.நினைவாலயம் சிறப்புற விரைவாக அமைய உங்கள் நிதிப்பங்களிப்பு வேண்டப்படுகின்றது:


