இலங்கையில் தமிழருக்கு இழைக்கப்பட்டது இனவழிப்பு என்பது பிரம்டனில் நிறுவப்பட உள்ள தமிழ் இனவழிப்பு நினைவாலயத்தின் ஊடாக, உலக மக்களுக்கு உரத்து கூறப்படும் என்பது உறுதி. ஒன்ராறியோ மாகாணத்தில் சட்டமாக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு வாரம், எமது இளம் பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் உள்வாங்கப்படுவதும் நீங்கள் அறிந்தது. இந்த இரண்டு விடயங்களும் எதிர் காலத்தில், இது மறைக்கப்படவோ, அல்லது மறுக்கப்படவோ கூடாது என்பதை நிலைநிறுத்திக் கொள்ளும் என்பது நிச்சயம்.